×

சட்டீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் மகன்களிடம் அமலாக்கத்துறை விசாரணை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் முதல்வரின் ஆலோசகரின் இரு மகன்கள்,மைத்துனர் ஆகியோர் நேற்று அமலாக்கத்துறையில் ஆஜரானார்கள். சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் ஆலோசகர் வினோத் வர்மா மற்றும் முதல்வரின் சிறப்பு அதிகாரி மனிஷ் பஞ்சோரேயின் வீடுகளில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. வினோத் மற்றும் மனிஷிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக இந்த சோதனைகள் நடந்தன.

சூதாட்ட செயலி தொடர்பாக காவல் துறை அதிகாரி சந்திரபூஷன் வர்மா, ஹவாலா தரகர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலியை உருவாக்கிய சவுரப் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் துபாயில் இருந்து செயல்படுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வினோத் வர்மா நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், என்னுடைய இரண்டு மகன்கள், மைத்துனர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர்கள் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள். நாளை(இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு எனது மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அமைப்புகள் ஆட்சியில் இருப்பவர்களின் உத்தரவுப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் அவரது குழுவின் மன வலிமையை யாரும் தகர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

The post சட்டீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் மகன்களிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Chief Minister ,Enforcement Directorate ,Raipur ,Bhupesh Bagel ,
× RELATED கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான...